பாடலாசிரியர் அஸ்மின்   (1551 views)

 

What is பாடலாசிரியர் அஸ்மின் doing now?

நீயின்றி நானில்லை என்றாய்-பின் தீயின்மேல் எனைவீசி கொன்றாய் நேற்றிருந்தோம் வெண்ணிலவில் ஒன்றாய்-இன்று வேறொருத்தன் கைப்பிடித்து சென்றாய்....
More than 1 month ago  ·  Comment »

Age

26

Location

COLOMBO, Sri Lanka

Birthday

May 2
 
Advertisement

Info

http://kavingerelanila.hi5.com - Send it to your friends

Age

26

Birthday

May 2

Location

COLOMBO, Sri Lanka

Languages

Tamil, English, Arabic
 

About Me

கவிஞர் ஈழநிலா பற்றிய அறிமுகக் குறிப்புக்கள்.

-கவிஞர் ஸி.எஸ்.காந்தி-.

இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், பொத்துவில் தேர்தல் தொகுதியில், பொத்துவில் பிரதேசத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர் ஈழநிலா 1983.5.2. இல் பிறந்தவர்.ஈழத்தில் மரபுக் கவிதை எழுதி வரும் இளம் கவிஞர்களுள் மிக முக்கியமானவர். பொத்துவில் மத்திய கல்லூரியின் பழைய மாணவராகவும், இலங்கை அஸ்ரப் கலை இலக்கிய பேரவையின் தலைவராகவும் இருக்கும் இவர், ஒரு தசாப்த காலமாக ஈழத்து இலக்கியத்துக்கு தன் படைப்புக்கள் மூலம் பங்களிப்பு செய்து வருகிறார்.இவரது 200க்கும் மேற்பட்ட கவிதை, சிறுகதை, பத்தி எழுத்துக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் ,இணைய சஞ்சிகைகளான கீற்று,வார்ப்பு,பதிவுகள்,எழுத்து,புதுமை போன்றவற்றிலும்
''ஈழநிலா'', ''பொத்துவில் அஸ்மின் உதுமாலெவ்வை'', ,''பொத்துவிலூர் அஸ்மின்'' ''யு.எல்.எம்.அஸ்மினா'' எனும் பெயர்களில் பிரசுரம் பெற்றுள்ளன.

''விடைதேடும்வினாக்கள்''(2003) .''விடியலின் ராகங்கள்''(2002) எனும் மகுடத்தில் இதுவரை இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். ''ஈழநிலாவின் கவிதைகள்'', ஈழத்து கவிஞர்கள் பற்றி சுடர் ஒளி வார வெளியீட்டில் இவர் எழுதிய ''ஈழநிலாவின் உணர்வுகள்'' பத்தி எழுத்துக்கள் பாகம் ஒன்றும் மிக விரைவில் நூலாக வெளிவர இருக்கிறது. தற்போது இலங்கையிலிருந்து ஒளிபரப்பாகும் சர்வதேச தமிழ் தொலைக்காட்சியான 'டான் டீவியின்'' நிகழ்ச்சி தொகுப்பாளராக கடமைபுரியும் இவர் டான் டீவியில் ''சூரிய விரல்கள்'' என்ற இலக்கிய நிகழ்ச்சி தயாரித்து வழங்குகின்றார்.

.சக்தி டீவியின்‘இசை இளவரசர்கள்’போட்டியில7000போட்டியாளர்களுக்குள் தேர்வான 16 பாடலாசிரியர்களுள் இவரும் ஒருவர்.ஏலவே தேசியமட்ட கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு ''ஜனாதிபதி விருது''(2001) பேராதனை பல்கலைக்கழகத்தின் ''தங்கப் பதக்கம்'' (2003) உட்பட ஏழுவிருதுகளை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Interests

கவிதை, சிறுகதை, நாவல்,பாடலிற்றல், அறிவிப்பு
பத்தி எழுத்து, விமர்சனம், நல்ல சினிமா
(கலை இலக்கியம்)

Favorite Music

 

Favorite Movies

காதல், அழகி ,கற்றது தமிழ், ஆட்டோகிராப், ஒன்பது ரூபாய் நோட்டு
 

Favorite TV Shows

''கனாக காணும் காலங்கள்'', "கிரேன் மாஸ்டர்", "சூரியவிரல்கள்" (டான் டீவி)
 

Favorite Books

எனது கவிதை நூல்கள். 01 விடைதேடும் வினாக்கள்(2001) 02.விடியலின் ராகங்கள்(2002) 03.ரத்தமில்லாத யுத்தம்(2007) கவிஞர் வைரமுத்துவின் நூல்களையும் வாசிக்கிறேன.; கன்னித் தமிழை நேசிக்கிறேன். “வாசி வாசிக்கப்படுவாய்” “எழுது எழுதப்படுவாய்
 

Favorite Quote

 

hi5 Games

Play hi5 Games

பாடலாசிரியர் அஸ்மின் hasn't played any games recently.

 

Journal

View All 19 Entries    Add Comment

கவிஞர் ஈழநிலா (பொத்துவில் அஸ்மின்)
0094 771600795
kavingerasmin@yahoo.com


கேள்வி கேட்பவர்க்கு
கேழ்வரகும் இல்லையப்பா…
‘ஆமா’போடப்பா…
அத்தனையும் கிடைக்குமப்பா…


வாள்பிடிக்க எண்ணாதே…?
வாய்காட்டி நிற்காதே..…
வாலாட்ட கற்றுக்கொள்
வாழ்க்கை இருக்குதப்பா...…


காகம் அழகென்று
கருத்துரைத்தால் அதிகாரி..…
புறாப்போன்று இருக்குதென்று
புன்னகைக்க பழகிக்கொள்...…


பதவிபெற வேண்டுமென்றால்
பாய்விரிக்கக் கத்துக்கொள்..
முதல்பரிசு வேண்டுமெனில்
முதலிரவுக் கொத்துக்கொள்….


‘இன்டர்வியுவில்’ சித்திபெற
‘இங்கிலிசும்’ உனக்கெதற்கு…?
காசுபணம் இருக்கிறதா...?….
கழுதைக்கும் இடமிருக்கு...…


எதிர்த்துப் பேசாதே…
எதிர்காலம் மடிந்துவிடும்
எடுபிடியாய் மாறிக்கொள்
‘எம்பி’யாய் மாறிடலாம்...…


உண்மையாய் உழைக்காதே…
உன்தலைக்கு வேட்டுவரும்..
பொறுப்பாக நடிதம்பி
பொன்பரிசு வீடுவரும்....…


சமூகம் என்றோ டாதே..
சாவுமணி அடிப்பார்கள்…
சுயநலத்தை கையில்கொள்
சுகத்தோடு வாழ்ந்திடுவாய்….    
     

Applications

Browse Applications

 

Widgets

 

 

hi5 Gifts

Give a Gift    Get hi5 Coins

பாடலாசிரியர் அஸ்மின் has no unwrapped gifts.
 

Comments | View All Entries

Leave a comment for பாடலாசிரியர் அஸ்மின்

May 2 7:35 AM
 
உளம்திறந்து உரிமையுடன் வாழ்த்துரைத்தீர் நன்று -உண்மை உறவுகளை தோழமையை அறிந்து கொண்டேன் இன்று
 
 
Apr 30 12:17 AM
 
Wish you many more happy returns of the day,
Happy Birthday to you.

I wish you that all your dreams come true
 
 
 
Feb 16 3:44 AM
 
இலங்கையிலிருந்து ஒளிபரப்பாகும் ஒரே ஒரு 24மணிநேர தமிழ் தொலைக்காட்சி.''DANதமிழ்ஒளி''.

தினமும் இரவு 10.00 (ஐரோப்பிய நேரம் 5.30pm)நேரடியாக ஒளிபரப்பாகும் ''தாலாட்டு''நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழையுங்கள்..
0094 112623062

விபரங்களுக்கு... www.dantv.tv
 
Jan 20 10:27 AM
JULY says:
 
hi,how are you my dear friend ,you remember me.........take care.....
miss you...................
 
 
 
 
 
 
Dec 17, 2008 1:57 PM
 
''தலையில்லா முண்டங்கள்''

தலையெழுத்தை தலைகீழாய் எழுதிவிட்ட ஆண்டவனே
தந்துவிடு நல்வாழ்வை எமக்கு!-'தங்கத்
தலைவரினை' இழந்துவிட்டு தவிக்கின்ற 'எம்சமூகம்'
தலையிழந்து முண்டமெனக் கிடக்கு!

தலைவர்நாம் என்றவர்கள் தறுதலைகள் முன்னாலே
தலைகவிழ்ந்து நிற்கின்றார் எதற்கு-?அவர்
தலையாட்டி பொம்மைகள்போல் தனித்துவத்தை விட்டுவிடின்
தருவாரே சிலஎழும்பு அதற்கு!

தலையில்லாத் தலைகளினை தலைவரென நினைத்ததற்காய்
தலையிடிதான் எங்களுக்குப் பரிசு!-பதவிக்காய்
தலைசொறிந்து பல்லிளிக்கும் தலைவர்களால்
தடுமாறும் எம்வாழ்க்கை தரிசு!

தலைதடவி கண்களிலே கண்கெட்டோர் கைவைக்க
தலையணையில் எம்தலைகள் இருக்கு!-தங்கள்
தலைதப்பி னால்போதும் என்கின்ற கோழையரை
தேர்ந்தெடுத்த நாங்கள்தான் கிறுக்கு!

தலைப்பிறையை மேகத்தால் தகர்த்தெறிய முடியாது
தலைவர்களே கொண்டிடுவீர் ஒப்பு!-உங்கள்
தலைகளினை காப்பாற்ற கண்ணிருந்தும் குருடர்களாய்
தவறுகளை பார்த்திருத்தல் தப்பு!

தலையில்லா முண்டங்களாய் மாறிவிட்ட எம்மவர்க்கு
தலையாக ஒருதலைவன் எழுவான்!-அவன்
தலைவரவர் சுவடுகளில் தயங்காமல் நிதம்நடக்க
தளையொடிந்து சிரிக்குமெங்கள் எழுவான்!!
 
Dec 13, 2008 7:26 AM
 
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காலலை
பொன்வண்ணம் சூடிடும் காரிகை
பெண்ணே உன் காஞ்சலை

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
(நெஞ்சுக்குள்..)
---------------------------------------------
''எமது 'டேன் தமிழ் ஒளி' வானொலியின் குறியீட்டு பாடல்''

உலகெங்கும் கேட்டிடும் வானொலி
உயிருக்குள் வாழ்ந்திடும் காதலி
கானங்கள் ஒவ்வொன்றும் தேன்துளி
கவிதையே எம்மொழி...

உலகத்தின் காதில் தேனூற்றினோம்
உறங்காமல் விழிவிளக்கேற்றினோம்
திக்கெட்டும் தமிழுணர்வூட்டினோம்
தீமையை ஓட்டினோம்

பூவாசம் வாசம் பூவாசம்
எங்கள் தேசம் தேசம் எம் சுவாசம்
நீங்கள் தேசம் கடந்து போனாலும்
எங்கள் நேசம் பாசம் உயிர்வாழும்....
(உலகெங்கும்)

பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின்(ஈழநிலா)
2008.12.13
 
 
Dec 5, 2008 8:10 PM
fam says:
 
Hi Asmin,
Thanks 4 addding me as a friend of ur's!
Have a great day!!!!!!!!!!!!
KIT Always........
 
 
Dec 4, 2008 11:37 AM
 
போர் சலங்கை கட்டியாடும் இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து, வங்கக்கடல் கடந்து, தங்கத்தமிழ் சுமந்து, சர்வதேசமெங்கும் சாதனைகள் செய்து , சந்தனத்தமிழில்
சரித்திரம் படைக்கின்றது;இலங்கையிலிருந்துமுதன்முதலாக இணையத்திலும் செய்மதியூடாகவும் ஒளிபரப்பாகும் ஒரேஓரு 24 மணிநேர தமிழ் தொலைக்காட்சியான ''டேன்தமிழ் ஒளி''.

எங்கள் சகோதர வானொலியான ''TRTதமிழ் அலை'' இப்பொழுது முதல் இணையத்தில் தேன்வார்க்கும் உங்கள் இதயவானொலியாக......

தொடர்புகளுக்கு....
0094 112623786,
0044 2070470655

Visit to listen the Live TRT Tamil Alai Radio on The Web http://www.trttamilalai.com and To Watch DAN TV Visit http://www.dantv.tv
 
Dec 4, 2008 5:49 AM
 
http://www.trttamilalai.com/
 

Title
body